தமிழ் அடகு யின் அர்த்தம்

அடகு

பெயர்ச்சொல்

 • 1

  (நகை, பாத்திரம் போன்ற) பொருளை ஈடாகப் பெற்றுப் பணம் தரும் முறை/பொருளை ஈடாக வைத்துப் பணம் பெறும் முறை.

  ‘அவர் அடகு வியாபாரம் செய்கிறார்’
  ‘மனைவியின் மூக்குத்தி அடகுக்குப் போய்விட்டது’
  ‘அடகுக்குப் போன நகைகள் எல்லாம் மூழ்கிவிட்டது என்று பொறுப்பில்லாமல் பேசாதே’
  ‘இந்த நகையை அடகு வைத்துவிட்டு ஐந்தாயிரம் ரூபாய் வாங்கி வா’
  உரு வழக்கு ‘மானத்தை அடகு வைத்து இப்படி ஒரு பிழைப்பு பிழைக்க வேண்டுமா?’
  உரு வழக்கு ‘பதவிக்காகத் தன்மானத்தை அடகு வைப்பதா?’