தமிழ் அட்டகாசம் யின் அர்த்தம்

அட்டகாசம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  தீங்கு, நாசம், தொல்லை போன்றவற்றை ஏற்படுத்தும் செயல்; அட்டூழியம்.

  ‘கொள்ளைக்காரர்களின் அட்டகாசம் பொறுக்க முடியவில்லை’
  ‘வயல்களில் புகுந்து யானைகள் அட்டகாசம்’
  ‘இந்த ஊரில் ரவுடிகளின் அட்டகாசத்தால் பெண்கள் இரவில் நடமாடவே பயப்படுகிறார்கள்’

 • 2

  ஆர்ப்பாட்டம்.

  ‘திரைப்படத்தில் வில்லனின் அட்டகாசமான சிரிப்பு’
  ‘அழுது அட்டகாசம் செய்துவிட்டது குழந்தை’

 • 3

  பேச்சு வழக்கு விளம்பரப்படுத்திக்கொள்ளுதல்.

  ‘கழுத்தில் காசுமாலை, காதில் வைரத்தோடு என்று அட்டகாசமாகக் காணப்பட்டாள்’

 • 4

  பேச்சு வழக்கு பிரமாதம்.

  ‘அவருடைய ஆட்டம், இன்று அட்டகாசம்தான்’
  ‘என்ன அட்டகாசமாக ஆடினான் தெரியுமா?’