தமிழ் அட்டவணை யின் அர்த்தம்

அட்டவணை

பெயர்ச்சொல்

 • 1

  விவரங்களைப் பத்திகளாக வரிசைப்படுத்திக் காட்டுவது; பட்டியல்.

  ‘வெள்ளி முத்திரை நாணயங்களைக் கீழ்க்கண்ட அட்டவணைப்படி பிரிக்கலாம்’
  ‘பேருந்து அட்டவணை’

 • 2

  (ஒரு ஆவணத்தின்) இறுதியில் பட்டியலாகச் சேர்க்கப்பட்டது.

  ‘பொது விற்பனை வரிச் சட்டத்தின் கீழுள்ள அட்டவணைகளைத் திருத்தி அமைக்கும் யோசனை உண்டா?’
  ‘அரசியல் அமைப்பின் எட்டாவது அட்டவணையில் மேலும் சில மொழிகளைச் சேர்ப்பது குறித்துப் பரிசீலிக்கப்படும்’