தமிழ் அட்டவணைப்படுத்து யின் அர்த்தம்

அட்டவணைப்படுத்து

வினைச்சொல்-படுத்த, -படுத்தி

  • 1

    (எண்கள், தகவல்கள் போன்றவற்றை) வரிசைப்படி அல்லது வகைப்படி பட்டியலாக அமைத்தல்.

    ‘நூலின் இறுதியில் ஆசிரியர் வரலாற்று நிகழ்வுகளை அட்டவணைப்படுத்தித் தந்திருக்கிறார்’
    ‘தமிழ் மாதங்களை அட்டவணைப்படுத்தி எழுதுக என்பதே முதல் கேள்வியாகக் கேட்கப்பட்டிருந்தது’