தமிழ் அடடே யின் அர்த்தம்

அடடே

இடைச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு வியப்பு, வருத்தம், அனுதாபம் போன்ற உணர்ச்சிகளைத் தெரிவிக்க வாக்கியத்தின் தொடக்கத்தில் பயன்படுத்தும் இடைச்சொல்.

    ‘அடடே! இவர்கூட நேற்று கூட்டத்துக்கு வந்திருந்தாரே’
    ‘அடடே! அவர் ஊருக்குப் போயிருக்கிறார் என்பதை உங்களிடம் சொல்ல மறந்துவிட்டேன்’
    ‘அடடே! பார்த்துப் போகக் கூடாதா? படி தடுக்கிவிட்டதே’