தமிழ் அடம்பிடி யின் அர்த்தம்

அடம்பிடி

வினைச்சொல்-பிடிக்க, -பிடித்து

  • 1

    (சொல்வதைக் கேட்காமல்) பிடிவாதம் காட்டுதல்.

    ‘பால் குடிக்க மாட்டேன் என்று குழந்தை அடம்பிடிக்கிறது’
    ‘பள்ளிக்கூடத்துக்கு ஒருநாள்கூட என் பையன் அடம்பிடிக்காமல் போனதில்லை’
    உரு வழக்கு ‘கை விரல்களில் ஒட்டிக்கொண்டிருந்த பிசின் கழுவியும் போகாமல் அடம்பிடித்தது’