தமிழ் அடர்த்தி யின் அர்த்தம்

அடர்த்தி

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  செறிவு; நெருக்கம்.

  ‘அடர்த்தியான காடு’
  ‘ஆசியாவைவிட ஐரோப்பாவில் மக்கள் அடர்த்தி குறைவு’

 • 2

  (நிறத்தைக் குறிப்பிடுகையில்) வெளிறியதாக இல்லாமல் ஆழ்ந்ததாக இருப்பது.

  ‘ஓவியத்தில் நீல வண்ணத்தின் அடர்த்தியைக் குறைத்தால் நன்றாக இருக்கும்’
  ‘கறுப்பின் வெவ்வேறு அடர்த்தி’

 • 3

  இயற்பியல்
  குறிப்பிட்ட ஒரு கன பரிமாணத்தில் செறிந்திருக்கும் பொருளின் நிறை.

  ‘பாதரசத்திற்கு அடர்த்தி அதிகம்’