தமிழ் அடிதடி யின் அர்த்தம்

அடிதடி

பெயர்ச்சொல்

 • 1

  (கையால் தாக்கிப் போடும்) சண்டை; கைகலப்பு.

  ‘பேசிக்கொண்டே இருந்தவர்கள் திடீரென்று அடிதடியில் இறங்கிய காரணம் என்ன?’
  ‘அடிதடியில் ஆரம்பித்த சண்டை கொலையில் முடிந்தது’
  ‘அவர் அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்டார்’

 • 2

  (ஒன்றைப் பெற அல்லது செய்ய நடக்கும்) கடும் போட்டி.

  ‘இலவசச் சேலை வழங்கும் இடத்தில் ஒரே அடிதடியாக இருக்கிறது’
  ‘உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்த பல நாடுகளிடையே அடிதடி’