தமிழ் அடித்துக்கொண்டு செல் யின் அர்த்தம்

அடித்துக்கொண்டு செல்

வினைச்சொல்செல்ல, சென்று

 • 1

  (வெள்ளம், காற்று முதலியன) இழுத்துக்கொண்டு போதல்.

  ‘காற்று வீட்டுக் கூரைகளை அடித்துக்கொண்டு சென்றது’
  ‘வெள்ளத்தால் நிலத்திலிருந்து மண் அடித்துக்கொண்டு செல்லப்படுகிறது’
  ‘கூட்டம் அவனை அடித்துக்கொண்டு சென்றது’
  உரு வழக்கு ‘கலையார்வம் அவனை நாடகத் துறைக்கு அடித்துக்கொண்டு சென்றது’