தமிழ் அடித்துக்கொள் யின் அர்த்தம்

அடித்துக்கொள்

வினைச்சொல்-கொள்ள, -கொண்டு

 • 1

  (ஒருவரோடொருவர்) சண்டைபோடுதல்.

  ‘சொத்துக்காக அண்ணன் தம்பிகள் அடித்துக்கொள்கிறார்கள்’

 • 2

  (ஒன்றைச் செய் அல்லது செய்யக்கூடாது என்று) திரும்பத்திரும்பச் சொல்லுதல்.

  ‘மரத்தில் ஏறாதே, ஏறாதே என்று அடித்துக்கொண்டேன். ஏறிக் காலை ஒடித்துக்கொண்டு வருகிறாய்’
  ‘‘அகத்திக்கீரை வாங்கிக்கொண்டு வா’ என்று அம்மா அடித்துக்கொள்கிறாளே, வாங்கி வரக் கூடாதா?’