தமிழ் அடித்துக்கொள்ள யின் அர்த்தம்

அடித்துக்கொள்ள

வினையடை

  • 1

    (ஒரு துறை, திறமை போன்றவற்றில் ஒன்றை அல்லது ஒருவரை) மிஞ்சுவதற்கு.

    ‘பீமன் வேஷம் கட்டி ஆடுவதில் எங்கள் மாமாவை அடித்துக்கொள்ள ஆள் கிடையாது’
    ‘ஓட்டப் பந்தயத்தில் இவனை அடித்துக்கொள்ள இந்தப் பள்ளியில் யாராவது இருக்கிறார்களா?’