தமிழ் அடிபட்டுப்போ யின் அர்த்தம்

அடிபட்டுப்போ

வினைச்சொல்-போக, -போய்

 • 1

  (வழக்கு, முயற்சி போன்றவை) எடுபடாமல் போதல்.

  ‘வக்கீல் நன்றாகத்தான் வாதாடினார், இருந்தாலும் வழக்கு அடிபட்டுப்போயிற்று’
  ‘ஜனரஞ்சகமான படங்கள் அதிகமாக வருவதால் சோதனை முயற்சியாக எடுத்த படங்கள் அடிபட்டுப்போகின்றன’

 • 2

  (சேமிப்பு முதலியன) தீர்ந்துபோதல்; குறைந்துபோதல்.

  ‘கல்யாணச் செலவால் சேமிப்பெல்லாம் அடிபட்டுப்போயிற்று’