அடிபடு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

அடிபடு1அடிபடு2

அடிபடு1

வினைச்சொல்-பட, -பட்டு

 • 1

  (விபத்தில்) நசுக்கப்படுதல்.

  ‘தெருநாய் வண்டியில் அடிபட்டுச் செத்தது’

 • 2

  (வாழ்க்கையில்) பல பிரச்சினைகளையும் துன்பங்களையும் அனுபவித்தல்.

  ‘நீ பல இடங்களுக்குப் போய் அடிபட்டால்தான் வாழ்க்கையைப் புரிந்துகொள்வாய்’

அடிபடு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

அடிபடு1அடிபடு2

அடிபடு2

வினைச்சொல்-பட, -பட்டு

 • 1

  (பரவலாக) குறிப்பிடப்படுதல்; பேசப்படுதல்.

  ‘தண்ணீர்ப் பற்றாக்குறை என்னும் செய்தி வருடத்துக்கு ஒரு முறையாவது பத்திரிகையில் அடிபடுவது உண்டு’
  ‘அமைச்சர் பதவிக்கு எங்கள் தொகுதி உறுப்பினர் பெயர் அடிபடுகிறது’