தமிழ் அடியெடுத்து வை யின் அர்த்தம்

அடியெடுத்து வை

வினைச்சொல்வைக்க, வைத்து

 • 1

  (ஒன்றை நோக்கி) நடகக ஆரம்பித்தல்.

  ‘நான் வீட்டை நோக்கி அடியெடுத்து வைத்தேன்’
  ‘தயங்கித்தயங்கி அடியெடுத்து வைத்து அறைக்குள் நுழைந்தாள்’
  உரு வழக்கு ‘அடுத்த நூற்றாண்டில் அடியெடுத்து வைக்கும் தருணத்தில் இயற்கையோடு நமக்குள்ள உறவை மேம்படுத்திக்கொள்ளவேண்டும்’

 • 2

  (புதியவரின் அல்லது புதிய ஒன்றின் வருகையைக் குறிப்பிடும்போது) நுழைதல்; புகுதல்.

  ‘இவன் எப்போது இந்த அலுவலகத்தில் அடியெடுத்து வைத்தானோ அப்போதே பிரச்சினை ஆரம்பமாகிவிட்டது’
  ‘சீனாவில் தோன்றிய காகிதத் தொழில் ஐரோப்பாவில் அடியெடுத்து வைப்பதற்குக் கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகள் ஆயிற்று’

 • 3

  (ஒருவர் புதிய துறையில்) ஈடுபடுதல்; (ஒன்று புதிய நிலைக்கு) செல்லுதல்.

  ‘அந்த நாடக நடிகர் இப்போதுதான் திரைப்படத் துறையில் அடியெடுத்து வைக்கிறார்’
  ‘இத்தகைய சகிப்பின்மை இப்போதே தடுத்து நிறுத்தப்படாவிட்டால் நம் சமூகம் அழிவுப் பாதையில் அடியெடுத்து வைத்துவிடும்’