தமிழ் அடிவாங்கு யின் அர்த்தம்

அடிவாங்கு

வினைச்சொல்-வாங்க, -வாங்கி

  • 1

    (வாழ்க்கையில்) அடிபடுதல்.

    ‘வாழ்க்கையில் அடிவாங்காமல் முன்னேற முடியாது’

  • 2

    பேச்சு வழக்கு (நீண்ட காலப் பயன்பாட்டினால் இயந்திரம் போன்றவை) தேய்ந்துபோதல்; செயல்படும் திறன் குறைதல்.

    ‘ஏகத்துக்கு அடிவாங்கியிருக்கிற இந்த சைக்கிளையா வாங்கப்போகிறாய்?’