தமிழ் அடி அழி யின் அர்த்தம்

அடி அழி

வினைச்சொல்அழிக்க, அழித்து

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு கோவிலில் அங்கப்பிரதட்சிணம் செய்பவரைத் தொடர்ந்து, அவர் உருண்டு செல்லும் வழியிலேயே அல்லது சுவாமி வீதியுலா வரும்போது பின்தொடர்ந்து செல்லுதல்.

    ‘அப்பா அங்கப்பிரதட்டை செய்ய அம்மாவும் அக்காவும் அடி அழித்துச் சென்றார்கள்’
    ‘ஒவ்வொரு வருடமும் திருவிழாவுக்கு அம்மா அடி அழிப்பாள்’
    உரு வழக்கு ‘எதற்கு அவர்களுக்குப் பின்னாலேயே அடி அழித்துக்கொண்டு போனாய்?’