தமிழ் அடு யின் அர்த்தம்

அடு

வினைச்சொல்பெரும்பாலும் ‘அடுக்குமா’, ‘அடுக்காது’ போன்ற வடிவங்களில் மட்டும்

  • 1

    பொருத்தமாக இருத்தல்; ஏற்றதாதல்.

    ‘கூலியாட்களின் பணத்தைக் கொடுக்காமல் இருப்பது உங்கள் தகுதிக்கு அடுக்குமா?’
    ‘இந்த அக்கிரமம் கடவுளுக்கே அடுக்காது’
    ‘இப்படி அநியாய வட்டி வாங்குகிறார்களே, யாருக்கு அடுக்கும்?’