அடுக்கு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

அடுக்கு1அடுக்கு2அடுக்கு3

அடுக்கு1

வினைச்சொல்அடுக்க, அடுக்கி

 • 1

  ஒன்றன் மேல் ஒன்றாக அல்லது ஒன்றன் பின் ஒன்றாக வைத்தல்.

  ‘நெல் மூட்டைகளை வீட்டுக்குக் கொண்டுவந்து அடுக்கினார்கள்’
  ‘அலமாரியில் புத்தகங்களை அடுக்கிக்கொண்டிருக்கிறான்’

 • 2

  ஒன்றன் பின் ஒன்றாகத் தொடர்ந்து குறிப்பிடுதல்.

  ‘நான் எதில் குறைந்தவன்? பணத்திலா, அந்தஸ்திலா, பதவியிலா என்று அடுக்கிக்கொண்டேபோனான்’

அடுக்கு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

அடுக்கு1அடுக்கு2அடுக்கு3

அடுக்கு2

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (பொருள்கள்) ஒன்றன் மேல் ஒன்றாக அல்லது ஒன்றன் பின் ஒன்றாக உள்ள அமைப்பு.

  ‘பாறைகளின் அடுக்கு’
  ‘புத்தக அடுக்கு’

 • 2

  ஒன்றனுள் ஒன்றாக வைக்கும்படியான பாத்திரத் தொகுப்பு/மேற்குறிப்பிட்ட தொகுப்பில் ஒரு பாத்திரம்.

  ‘ஒரு பெரிய எவர்சில்வர் அடுக்கு நிறைய மோர் வைக்கப்பட்டிருந்தது’

 • 3

  (ரயில் பெட்டியில்) பயணிகள் தூங்குவதற்காக ஒன்றன் மேல் ஒன்றாக இடைவெளி விட்டு அமைக்கப்பட்டிருக்கும் படுக்கை.

  ‘அடுத்த மாதம் முதல் மூன்றடுக்குப் படுக்கை வசதி கொண்ட பெட்டி கூடுதலாக இணைக்கப்படும்’

 • 4

  (பாதுகாப்பு போன்றவற்றில்) அடுத்தடுத்து அமைவதாகவும் வெவ்வேறு நிலைகளைக் கொண்டதாகவும் ஏற்படுத்தப்படுவது.

  ‘கலவரம் நடைபெற வாய்ப்புள்ள வாக்குச் சாவடிகளுக்கு மூன்றடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது’

அடுக்கு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

அடுக்கு1அடுக்கு2அடுக்கு3

அடுக்கு3

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

கணிதம்
 • 1

  கணிதம்
  எத்தனை முறை பெருக்கப்பட வேண்டும் என்பதைக் குறிப்பிடும் வகையில் அடிமானத்தின் மேல் இடப்படும் எண்; படி.

  ‘இரண்டின் அடுக்கு நான்கு (2⁴) என்றால் இரண்டை நான்கு முறை பெருக்க வேண்டும் என்பது பொருள்’