தமிழ் அடுத்த யின் அர்த்தம்

அடுத்த

பெயரடை

 • 1

  (காலத்தைக் குறிப்பிடும்போது) ஒன்றுக்குப் பின் ஒன்று தொடர்ந்து வருகிற; (இடத்தைக் குறிப்பிடும்போது) தொடர்ந்தாற்போல் இருக்கிற.

  ‘இந்த வாரம் வரவில்லை. அடுத்த வாரம் வருகிறேன்’
  ‘அடுத்த ரயில் எப்போது வரும்?’
  ‘அடுத்த தேர்வு எப்போது?’
  ‘அடுத்த வீடு’
  ‘அடுத்த தெரு’

 • 2

  முன்னர் குறிப்பிட்டதைத் தொடர்ந்து வரும்.

  ‘அடுத்த பிரச்சினை என்ன?’
  ‘அடுத்த விஷயத்துக்குப் போவோம்’