தமிழ் அடுத்து யின் அர்த்தம்

அடுத்து

வினையடை

 • 1

  அணுகி; நெருங்கி.

  ‘காலம் அடுத்து வந்தால் காரியம் கைகூடும்’

தமிழ் அடுத்து யின் அர்த்தம்

அடுத்து

இடைச்சொல்

 • 1

  (காலத்தைக் குறிக்கையில்) ‘ஒன்று முடிந்து அதன் தொடர்ச்சியாக’ என்ற பொருளில் பயன்படுத்தப்படும் இடைச்சொல்.

  ‘அடுத்து நாம் செய்ய வேண்டியது என்ன?’
  ‘தலைவரின் உரையை அடுத்து கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன’
  ‘குண்டு வைக்கப்பட்டிருப்பதாகக் கிடைத்த செய்தியை அடுத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன’

 • 2

  (இடத்தைக் குறிக்கையில்) ‘ஒன்றை அல்லது ஒருவரை ஒட்டி’ என்ற பொருளில் பயன்படுத்தும் இடைச்சொல்; ‘பக்கத்தில்’.

  ‘ஊருக்கு அடுத்து இலுப்பைத் தோப்பு’
  ‘ராமனை அடுத்துக் கிருஷ்ணன் நுழைந்தான்’