தமிழ் அடுப்பு யின் அர்த்தம்

அடுப்பு

பெயர்ச்சொல்

 • 1

  விறகு, மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு போன்றவற்றைக் கொண்டு நெருப்பு மூட்டி அல்லது மின்சாரம் முதலியவற்றால் சூடு உண்டாக்கிச் சமையல் செய்யப் பயன்படுத்தும் சாதனம் அல்லது அமைப்பு.

  ‘கரி அடுப்பு’
  ‘கிராமப்புற வீடுகளில் இன்றும் மண்ணால் ஆன அடுப்புகளைக் காணலாம்’
  ‘மண்ணெண்ணெய் அடுப்பு’

 • 2

  காளவாய் போன்றவற்றில் விறகை வைத்து எரிப்பதற்கான அமைப்பு.

  ‘உலர்ந்த களிமண் பொம்மைகளை அடுப்பில் வைத்துச் சுட்டனர்’
  ‘காளவாய் அடுப்பில் விறகை அடுக்கிக்கொண்டிருந்தார்கள்’