தமிழ் அடுப்பூது யின் அர்த்தம்

அடுப்பூது

வினைச்சொல்-ஊத, -ஊதி

  • 1

    (வீட்டிலேயே அடைந்துகிடக்கும் பெண்ணின் நிலையைக் கூறும்போது) வீட்டு வேலைகளைச் செய்துகொண்டு வீட்டிலேயே இருத்தல்.

    ‘சில பெண்களைப் போல் அடுப்பூதிக்கொண்டு இருக்காமல், நீ படித்து நல்ல வேலைக்குப் போக வேண்டும்’
    ‘இவ்வளவு கஷ்டப்பட்டுப் படித்ததெல்லாம் அடுப்பூதவா?’