தமிழ் அடே யின் அர்த்தம்

அடே

இடைச்சொல்

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு வியப்பைத் தெரிவிப்பதற்கு வாக்கியத்தின் தொடக்கத்தில் பயன்படுத்தப்படும் இடைச்சொல்.

  ‘அடே அப்பா! உங்கள் பையன் எவ்வளவு உயரமாக வளர்ந்துவிட்டான்!’
  ‘அடே சாமி! நீ எப்போது ஊரிலிருந்து வந்தாய்?’

 • 2

  பேச்சு வழக்கு உறவின் நெருக்கத்தை வெளிப்படுத்த அல்லது மரியாதைக் குறைவாக ஒரு ஆணை அழைக்கப் பயன்படுத்தும் இடைச்சொல்.

  ‘அடே, சீக்கிரம் வாடா. படம் ஆரம்பித்துவிடும்’
  ‘அடே, பீரோவை ஜாக்கிரதையாகத் தூக்கு’
  ‘அடே, சீக்கிரம் இடத்தைக் காலிபண்ணு’