அடை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

அடை1அடை2அடை3அடை4அடை5அடை6அடை7அடை8

அடை1

வினைச்சொல்அடைய, அடைந்து, அடைக்க, அடைத்து

 • 1

  பெறுதல்.

  ‘சுதந்திரம் அடைந்துவிட்டோம்’
  ‘அந்த அழகியை அடையப் பலரும் போட்டி போடுகிறார்கள்’
  ‘உழைப்பால் அவர் அடைந்திருக்கிற தகுதியும் மதிப்பும் ஏராளம்’

 • 2

  (ஓர் இடத்திற்குச் சென்று) சேர்தல்; எட்டுதல்.

  ‘நீந்திச் சென்று கரையை அடைந்தான்’
  ‘பறவைகள் கூட்டை அடைந்தன’
  ‘அரசுத் தொலைக்காட்சி ஏழு கோடி வீடுகளைச் சென்றடைகிறது’

 • 3

  (குறிப்பிட்ட வயதை, பருவத்தை) எட்டுதல்.

  ‘மூப்படைந்த அவர் உடல் தளர்ந்துகொண்டேவந்தது’
  ‘வயோதிகம் அடைந்துவிட்டால் பிறர் உதவி தேவைப்படுகிறது’

 • 4

  (சூரியன், சந்திரன்) மறைதல்.

  ‘முன்நிலவுக் காலம் என்பதால், நிலா அடைந்தாகிவிட்டது’
  ‘விடிந்ததுமுதல் அடையும்வரை இந்த வீட்டில் சச்சரவுதானா?’
  ‘விடியற்காலை மண்வெட்டி தூக்கினால் பொழுது அடைந்துதான் வீட்டுக்கு வருவார்’

 • 5

  (தூசி, அழுக்கு) சேர்தல்; படிதல்.

  ‘வீட்டில் தூசி அடைகிறது’
  ‘அழுக்கு அடைந்த சட்டை’

 • 6

  (பூச்சிகள், பிராணிகள் போன்றவை) ஓர் இடத்தில் தங்குதல்.

  ‘தோட்டத்தில் புதர்கள் இருந்தால் பாம்பு அடையும்’
  ‘சுவரெங்கும் மூட்டைப்பூச்சிகள் அடைந்து காணப்பட்டன’
  ‘பறவைகள் கூட்டில் அடைந்தன’
  உரு வழக்கு ‘இப்போது எல்லோரும் அமெரிக்காவில் போய் அடைகிறார்கள்’

 • 7

  (கடன், பாக்கி) தீர்தல்.

  ‘இரண்டு வருடத்துக்கு முன் வாங்கிய கடன் இன்னும் அடையவில்லை’

அடை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

அடை1அடை2அடை3அடை4அடை5அடை6அடை7அடை8

அடை2

வினைச்சொல்அடைய, அடைந்து, அடைக்க, அடைத்து

 • 1

  (ஓர் இடத்தில்) பிடித்து வைத்தல்.

  ‘போராட்ட வீரர்களைச் சிறையில் அடைத்தார்கள்’
  ‘தெருநாய்களைப் பிடித்துத் தனி இடத்தில் அடைத்துவைத்தார்கள்’

 • 2

  (ஒன்றை ஒன்றில்) நிரப்புதல்; திணித்தல்; (ஓர் இடத்தை) நிரப்புதல்.

  ‘தைலத்தைக் குப்பியில் அடைத்து விற்றுவந்தான்’
  ‘தலையணையில் பஞ்சை அடைத்தான்’
  ‘இது சின்னப் பெட்டிதான்; அதிக இடத்தை அடைக்காது’
  ‘இந்தப் பழங்களைப் பெட்டிகளில் அடைத்து அனுப்புகிறார்கள்’

 • 3

  (கதவை, ஜன்னலை) சாத்துதல்.

  ‘சாரல் அடிக்கிறது; ஜன்னலை அடை’

 • 4

  (கடை முதலியவற்றை நிரந்தரமாகவோ பணி முடிந்த பின்னரோ) மூடுதல்.

  ‘கோடை விடுமுறைக்காகப் பள்ளிக்கூடம் அடைத்துவிட்டார்கள்’
  ‘கடை அடைத்தே கிடக்கிறது’

 • 5

  (துவாரம், இடைவெளி முதலியவற்றில்) தடுப்பு ஏற்படுத்துதல்.

  ‘முள்ளை வெட்டிப் போட்டுப் பாதையை அடைத்தார்கள்’
  ‘துளையில் கட்டையைச் செருகி அடைத்தான்’

 • 6

  தடைபடுதல்.

  ‘இதயத்துக்கு இரத்தம் எடுத்துச்செல்லும் நாளம் அடைத்து வெடித்தது’
  ‘மூக்கு அடைக்கிறது’

 • 7

  (கடனை, பாக்கியை) தீர்த்தல்.

  ‘கடனை ஒரு வாரத்துக்குள் அடைத்துவிடுகிறேன்’

அடை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

அடை1அடை2அடை3அடை4அடை5அடை6அடை7அடை8

அடை3

துணை வினைஅடைய, அடைந்து, அடைக்க, அடைத்து

 • 1

  சில வகைப் பெயர்ச்சொற்களோடு இணைந்து ‘ஒரு நிலையைப் பெறுதல்’, ‘ஒரு நிலைக்கு உள்ளாதல்’ போன்ற பொருளில் அவற்றை வினையாக்கும் வினை.

  ‘மரணமடை’
  ‘தோல்வியடை’
  ‘துன்பமடை’
  ‘கோபமடை’
  ‘பெருமையடை’
  ‘எரிச்சலடை’
  ‘வியப்படை’
  ‘நஷ்டமடை’

அடை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

அடை1அடை2அடை3அடை4அடை5அடை6அடை7அடை8

அடை4

பெயர்ச்சொல்

 • 1

  குஞ்சு பொரிப்பதற்காக வைத்திருக்கும் முட்டைகளின் தொகுப்பு.

  ‘அடையிலிருந்து முட்டையை எடுக்காதே!’
  ‘கோழி அடைக்குத் திரும்பியது’

அடை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

அடை1அடை2அடை3அடை4அடை5அடை6அடை7அடை8

அடை5

பெயர்ச்சொல்

இலக்கணம்
 • 1

  இலக்கணம்
  ஒரு பெயர்ச்சொல்லுக்கு அல்லது வினைச்சொல்லுக்கு முன் வந்து அதை விவரிக்கும் சொல்.

  ‘‘தீவிரக் காதல்’ என்ற தொடரில் ‘தீவிர’ என்பது அடை’

அடை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

அடை1அடை2அடை3அடை4அடை5அடை6அடை7அடை8

அடை6

பெயர்ச்சொல்

 • 1

  அரிசியோடு சில பருப்பு வகைகளைச் சேர்த்துச் செய்யப்படும் காரச் சுவையுடைய ஒரு வகை (தடித்த) தோசை.

அடை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

அடை1அடை2அடை3அடை4அடை5அடை6அடை7அடை8

அடை7

பெயர்ச்சொல்

 • 1

  (தறியில்) பட்டைக் கரை நெய்வதற்கான அமைப்பு.

அடை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

அடை1அடை2அடை3அடை4அடை5அடை6அடை7அடை8

அடை8

பெயர்ச்சொல்