தமிழ் அண்டு யின் அர்த்தம்

அண்டு

வினைச்சொல்அண்ட, அண்டி

 • 1

  (ஒருவரை) அணுகுதல்; நெருங்குதல்; (ஒன்று) வந்துசேர்தல்.

  ‘தீமை எதுவும் அவளை அண்டாது’
  ‘இப்படி ஊட்டமில்லாத சாப்பாடு சாப்பிட்டால் நோய் அண்டத்தான் செய்யும்’
  ‘நூலகத்தைத் தொடங்க ஊரில் உள்ள பெரிய மனிதர்களை அண்டி உதவி கேட்டேன். ஆனால் யாரும் உதவ முன்வரவில்லை’

 • 2

  சார்ந்திருத்தல்.

  ‘ஆண்களை அண்டி வாழும் பெண்களின் நிலைமை மாற வேண்டும்’

 • 3

  பாதுகாப்பான இடத்தில் ஒதுங்குதல்.

  ‘வெயில் கொளுத்துகிறது; அண்ட நிழல் இல்லை’

 • 4

  இலங்கைத் தமிழ் வழக்கு (‘அண்டாது’ என்ற எதிர்மறை வடிவத்தில் மட்டும்) கட்டுப்படியாதல்.

  ‘அவனுக்குச் சாப்பாடு போட்டு அண்டாது’
  ‘என் மகனுக்குக் காசு கொடுத்து அண்டாது’