தமிழ் அண்டை யின் அர்த்தம்

அண்டை

பெயர்ச்சொல்

 • 1

  அருகில் இருப்பது; அண்மை.

  ‘அண்டை மாநிலங்கள்’
  ‘அண்டை வீட்டார்’

 • 2

  வட்டார வழக்கு (குறிப்பிட்ட இடத்தின்) பக்கம்.

  ‘அவள் கதவண்டை வந்து நின்றாள்’
  ‘கோயிலுக்குக் கீழண்டைப் பக்கத்தில் என் வீடு’

தமிழ் அண்டை யின் அர்த்தம்

அண்டை

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
 • 1

  வட்டார வழக்கு ஒன்று சரிந்து விழாமல் இருக்க வைக்கும் முட்டு.

  ‘சுவருக்குச் சவுக்குக் கழிகளை அண்டை கொடுத்திருக்கிறேன்’
  ‘தலைக்குக் கையை அண்டை கொடுத்துக்கொண்டு தூங்கினான்’

 • 2

  வட்டார வழக்கு (வரப்பில் உள்ள துளைகள் வழியாக நீர் வெளியேறிவிடாமல் தடுக்க வரப்பின் அடிப்பகுதியை) மண்ணால் பலப்படுத்தும் ஏற்பாடு.

  ‘அண்டை போட்ட பிறகுதான் உழ வேண்டும்’