தமிழ் அண்ணா யின் அர்த்தம்

அண்ணா

வினைச்சொல்அண்ணாந்து, அண்ணாந்த ஆகிய வடிவங்களில் மட்டும்

 • 1

  தலையை மேல் நோக்கி நிமிர்த்துதல்.

  ‘தண்ணீரை அண்ணாந்து குடித்தான்’
  ‘கழுத்து வலிக்கும் அளவுக்கு அண்ணாந்தால்தான் கோபுரத்தின் உச்சி தெரியும்’

தமிழ் அண்ணா யின் அர்த்தம்

அண்ணா

பெயர்ச்சொல்

 • 1

  காண்க: அண்ணன்

 • 2

  அண்ணன் என்னும் சொல்லின் விளி வடிவம்.

  ‘அண்ணா! இங்கே வா’