தமிழ் அண்மை யின் அர்த்தம்

அண்மை

பெயர்ச்சொல்

 • 1

  இன்று, இப்பொழுது என்று அறியப்படும் காலத்திற்குச் சற்று முந்தைய காலம்; சமீபம்.

  ‘இந்தச் சம்பவம் அண்மையில்தான் நடந்தது’
  ‘அண்மைக் காலம்வரை இந்தத் தீவு ஆங்கிலேயர் வசம் இருந்தது’

 • 2

  (இடத்தைக் குறிக்கும்போது) அருகு.

  ‘அவர் வீடு மிக அண்மையில்தான் இருக்கிறது’