அணி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

அணி1அணி2அணி3அணி4

அணி1

வினைச்சொல்அணிய, அணிந்து

 • 1

  (ஆடை, அணிகலன் முதலியவற்றை) உடலில் தரித்தல்; பொருத்துதல்; போடுதல்.

  ‘காலில் சதங்கை அணிந்து ஆடத் தொடங்கினாள்’
  ‘ஆணுறை அணிவதும் காப்பர்-டி அணிவதும் சில குடும்பக் கட்டுப்பாட்டு முறைகள்’

 • 2

  (திருநீறு, சந்தனம் போன்றவற்றை) பூசுதல்.

  ‘‘சிவசிவ’ என்று கூறிக்கொண்டே நெற்றியில் திருநீறு அணிந்தார்’

அணி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

அணி1அணி2அணி3அணி4

அணி2

பெயர்ச்சொல்

 • 1

  காண்க: அணிகலன்

 • 2

  செய்யுளின் பொருளைச் சிறப்பிக்கும் அலங்கார உத்தி.

  ‘அணி இலக்கணம்’

அணி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

அணி1அணி2அணி3அணி4

அணி3

பெயர்ச்சொல்

 • 1

  ஒரு திட்டத்தின் அல்லது கொள்கையின் அடிப்படையில் ஒன்றுபடும் குழு.

  ‘தேசிய நலனைக் கருத்தில் கொண்ட இந்த அணி வகுப்புவாதத்தை எதிர்ப்பதில் வியப்பில்லை’

 • 2

  போட்டிகளில் கலந்துகொள்ளும் குழு.

  ‘ஆசியக் கால்பந்தாட்டப் போட்டியில் கலந்துகொள்ளும் இந்திய அணி நாளை அறிவிக்கப்படும்’
  ‘இந்தக் கேள்விக்குக் காவிரி அணி கொடுத்த பதில் தவறு’

 • 3

  (ஒரு நாடு, அமைப்பு போன்றவற்றின் சார்பில்) கூட்டங்களில் கலந்துகொள்ளும் குழு.

  ‘காவிரி நீர்ப் பங்கீடு குறித்த கூட்டத்தில் தமிழ் நாட்டு அணி பல வல்லுநர்களைக் கொண்டிருக்கிறது’
  ‘அணு ஆயுத ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொள்ளும் இந்திய அணியில் நால்வர் இடம்பெறுவார்கள்’

 • 4

  (ராணுவம், காவல்துறை போன்றவற்றின்) பிரிவு.

  ‘தமிழ்நாடு சிறப்புக் காவல்படையின் இரண்டாவது அணியினுடைய ஆண்டு விழா நேற்று கொண்டாடப்பட்டது’
  ‘கப்பல் படையின் கிழக்கு அணியைச் சேர்ந்த மூன்று கப்பல்கள் பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டன’

 • 5

  (கட்சி போன்ற அமைப்புகளில் குறிப்பிட்ட பணிகளை மேற்கொள்ளும்) பிரிவு.

  ‘காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணிச் செயலாளர் நாளை அறிவிக்கப்படுவார்’
  ‘தேர்தல் சமயத்தில் நம் கட்சியின் மகளிர் அணிக்குச் சிறப்பான பங்கு உண்டு’

 • 6

  (குழுவாக வரும்) கூட்டம்.

  ‘மாநாட்டுக்கு அணி திரண்டு வாரீர்!’

 • 7

  (குழுக்களின்) வரிசை.

  ‘மாணவர்கள் அணி பிரிந்து நின்றிருந்தனர்’

அணி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

அணி1அணி2அணி3அணி4

அணி4

பெயர்ச்சொல்

கணிதம்
 • 1

  கணிதம்
  (அட்டவணைப்படுத்துவதற்குப் பதிலாக) கொடுக்கப்பட்ட எண்களைச் செவ்வக வடிவில் அமைக்கும் தொகுப்பு.