தமிழ் அணில் யின் அர்த்தம்

அணில்

பெயர்ச்சொல்

  • 1

    மென்மையான மயிர் அடர்ந்த வாலையும் முதுகில் (பெரும்பாலும்) மூன்று அல்லது ஐந்து கோடுகளையும் கொண்ட, மரங்களில் வாழும் (கொட்டைகள், பழங்கள் போன்றவற்றைக் கொறித்து உண்ணும்) ஒரு சிறு பிராணி.

    ‘இந்தியாவில் சில அணில்களுக்கு முதுகில் கோடுகள் இருக்காது’
    ‘அணில் கடித்த பழம் நன்றாக இனிக்கும் என்று சொல்வார்கள்’

  • 2

    சுமார் அரை மீட்டர் நீளத்தில் சதைப்பற்றோடு சாம்பல் நிறத்தில் இருக்கும், (உணவாகும்) கடல் மீன்.