தமிழ் அணிவகு யின் அர்த்தம்

அணிவகு

வினைச்சொல்-வகுக்க, -வகுத்து

 • 1

  (முக்கியமான நிகழ்ச்சி, விழா போன்றவற்றின்போது படைவீரர், மாணவர் போன்றோர்) சீரான ஒழுங்கில் ஒன்றுகூடுதல்.

  ‘குடியரசு தினத்தன்று படைவீரர்கள் அணிவகுத்துச் சென்றனர்’
  ‘குடியரசு தின நிகழ்ச்சிகளின் முடிவில் விமானப்படை விமானங்கள் அணிவகுத்துப் பறந்தன’

 • 2

  குழுவாகத் திரளுதல்.

  ‘இரு நடிகர்களின் ரசிகர்களும் எதிரெதிராக அணிவகுத்து நின்றனர்’