தமிழ் அணிவகுப்பு யின் அர்த்தம்

அணிவகுப்பு

பெயர்ச்சொல்

  • 1

    (முக்கியமான நிகழ்ச்சி, விழா போன்றவற்றின்போது படைவீரர், மாணவர் போன்றோர் அமைத்துக்கொள்ளும்) வரிசை ஒழுங்கு.

    ‘குடியரசுத் தலைவர் ராணுவ அணிவகுப்பைப் பார்வையிட்டார்’
    ‘மழை பெய்ததால் மாணவர் அணிவகுப்பு ரத்துசெய்யப்பட்டது’
    ‘விமானப் படை தினத்தன்று நடந்த விமான அணிவகுப்பைத் திரளான பார்வையாளர்கள் கண்டுகளித்தனர்’