தமிழ் அணுகு யின் அர்த்தம்

அணுகு

வினைச்சொல்அணுக, அணுகி

 • 1

  அருகில் செல்லுதல்; நெருங்குதல்.

  ‘குழந்தைகள் பாட்டியை அணுகி அவள் அருகில் அமர்ந்து கதை கேட்டனர்’
  ‘கையில் சாமான்களுடன் காரை அணுகிக் கதவைத் திறந்தார்’

 • 2

  (ஒருவரை அல்லது ஒரு நிறுவனத்தை ஏதேனும் ஒரு நோக்கத்திற்காக) நாடுதல்.

  ‘சட்ட விளக்கம் பெற ஒரு வழக்கறிஞரை அணுகினோம்’
  ‘ஏதேனும் ஒரு தேசிய வங்கியை அணுகிக் கடன் கேட்டுப்பாருங்கள்’

 • 3

  (குறிப்பிட்ட) கொள்கை முறையில் ஒன்றை நோக்குதல்.

  ‘இலக்கியத்தை அமைப்பியல் முறையில் அணுகி ஆராய்ந்தனர்’