அணை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

அணை1அணை2அணை3அணை4

அணை1

வினைச்சொல்அணைய, அணைந்து, அணைக்க, அணைத்து

 • 1

  (நெருப்பு, விளக்கு) நின்றுபோதல்; அவிதல்.

  ‘தெருவுக்கு வெளிச்சம் தந்துகொண்டிருந்த ஒரே விளக்கும் அணைந்தது’

அணை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

அணை1அணை2அணை3அணை4

அணை2

வினைச்சொல்அணைய, அணைந்து, அணைக்க, அணைத்து

 • 1

  (நெருப்பை, விளக்கை) நிறுத்துதல்; அவித்தல்.

  ‘அடுக்குமாடிக் கட்டடத் தில் நெருப்பை அணைப்பது பெரும்பாடுதான்’

அணை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

அணை1அணை2அணை3அணை4

அணை3

வினைச்சொல்அணைய, அணைந்து, அணைக்க, அணைத்து

 • 1

  (அன்போடு) தழுவுதல்.

  ‘குழந்தையை அணைத்து மகிழ்வதில் தாய்க்குத்தான் எவ்வளவு இன்பம்!’

 • 2

  (ஒரு பொருளைக் கைகளால்) மார்போடு சேர்த்துக்கொள்ளுதல்.

  ‘அவள் புத்தகங்களை மார்போடு அணைத்தவாறு நடந்து சென்றாள்’

 • 3

  (ஒன்றைப் பலப்படுத்துவதற்காக அதை) ஒட்டி (மண்ணை) போடுதல்.

  ‘மரத்துக்கு மண் அணைக்க வேண்டும்’
  ‘வெள்ளம் அரித்துச் சென்ற கரைக்கு மண் அணைத்து மிதிக்க வேண்டும்’

 • 4

  வண்டியில் கட்டிய மாடுகளை ஒன்றுக்கொன்று இணையாக நெருக்கிக் கொண்டுசெல்லுதல்/ஒன்றை மற்றொன்றின் அருகில் கொண்டுபோதல்.

  ‘‘மாட்டை அணைத்து ஓட்டு’ என்று அவ்வப்போது குரல் வந்தது’
  ‘காரை ஒரு பக்கமாக அணைத்து நிறுத்து’

அணை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

அணை1அணை2அணை3அணை4

அணை4

பெயர்ச்சொல்

 • 1

  ஆற்றின் குறுக்கே நீரைத் தேக்கிவைக்கும் அமைப்பு.

  ‘பாசனத்திற்கு அணையிலிருந்து நீர் திறந்துவிடப்படுகிறது’

 • 2

  சரிந்து விழாமல் இருக்க வைத்துக்கொள்ளும் முட்டு.

  ‘கையை மடக்கித் தலைக்கு அணையாக வைத்துத் தூங்கினாள்’