தமிழ் அதட்டிஉருட்டி யின் அர்த்தம்

அதட்டிஉருட்டி

வினையடை

  • 1

    அதிகாரத்தோடும் கண்டிப்போடும் மிரட்டி.

    ‘பையனை அதட்டி உருட்டி வீட்டுப்பாடம் எழுதவைப்பதற்குள் போதும்போதும் என்றாகிவிட்டது’
    ‘வீட்டைக் காலி பண்ண மறுத்தவரை அதட்டிஉருட்டி வெளியேற்றினேன்’
    ‘இந்தக் காலத்தில் அதட்டிஉருட்டி யாரிடமும் வேலைவாங்க முடியாது’