தமிழ் அதட்டு யின் அர்த்தம்

அதட்டு

வினைச்சொல்அதட்ட, அதட்டி

 • 1

  அதிகாரமாக உரத்த குரலில் பணித்தல் அல்லது கண்டித்தல்.

  ‘அவள் குழந்தையைப் பார்த்து ‘இனிமேல் இப்படிச் செய்யாதே’ என்று அதட்டினாள்’
  ‘‘பழம் என்ன விலை?’ என்று அவர் அதட்டிய குரலில் கேட்டதும் கடைக்காரனுக்குக் கோபம் வந்தது’

 • 2

  உரத்த குரலில் விரட்டுதல்.

  ‘வண்டிக்காரன் மாடுகளை அதட்டி ஓட்டினான்’