தமிழ் அத்துடன் யின் அர்த்தம்

அத்துடன்

இடைச்சொல்

 • 1

  ‘முன்னர் குறிப்பிடப்படுவதோடு கூட’ என்ற பொருளில் இரண்டு வாக்கியங்களுக்கு அல்லது தொடர்ந்து வரும் இரண்டு தொடர்களுக்கு இடையே உள்ள தொடர்பைக் காட்டப் பயன்படுத்தப்படும் இடைச்சொல்; ‘அதோடு’.

  ‘தொழிற்சாலையில் தரக் கட்டுப்பாட்டுப் பணிக்கெனப் புதிதாகப் பத்து ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் இவர்களை மற்ற பணிகளுக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம்’
  ‘மகனுடைய வேலை விஷயமாகச் சென்னை செல்கிறேன். அத்துடன் புத்தகக் கண்காட்சியையும் பார்த்துவிட்டு வருவேன்’
  ‘வெண்ணெயுடன் சர்க்கரை சேர்த்துக் குழைத்து, அத்துடன் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக அடிக்கவும்’
  ‘ஒரே இருட்டு. அத்துடன் பாம்பைப் பற்றிய பயமும் சேர்ந்துகொண்டது’

 • 2

  நிகழ்ச்சி, செயல் போன்றவை முடிவடைகின்றன என்ற பொருளில் ஒரு வாக்கியத்தின் தொடக்கத்தில் பயன்படுத்தப்பட்டு அந்த வாக்கியத்தை முந்தைய வாக்கியத்துடன் தொடர்புபடுத்தும் இடைச்சொல்.

  ‘கடைசி நாள் காலையில் ‘படுகளம்’. அத்துடன் பாரதக் கூத்து முடிவடையும்’