தமிழ் அதனால் யின் அர்த்தம்

அதனால்

இடைச்சொல்

  • 1

    ‘(குறிப்பிடப்படுவதன்) காரணமாக அல்லது விளைவாக’, என்ற பொருளில் இரண்டு வாக்கியங்களைத் தொடர்புபடுத்தும் இடைச்சொல்; ‘ஆகவே’; ‘எனவே’.

    ‘அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லை. அதனால் அவர் வரவில்லை’
    ‘அந்த வேலைக்கான அடிப்படைத் தகுதிகள் எனக்கு இல்லை. அதனால் அந்த வேலை எனக்குக் கிடைக்காது’
    ‘வாக்காளர் அடையாள அட்டை நான் இன்னும் வாங்கவில்லை. அதனால் ஓட்டுப்போட முடியாது’