தமிழ் அதாவது யின் அர்த்தம்

அதாவது

இடைச்சொல்

  • 1

    ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்த விரும்பும்போது இரண்டு வாக்கியங்களுக்கு இடையே அல்லது தொடர்ந்து வரும் இரண்டு பகுதிகளுக்கு இடையே உள்ள ஒத்த தொடர்பை விளக்கும் முறையில் பயன்படுத்தப்படும் இடைச்சொல்; ‘எவ்வாறு என்றால்’; ‘சொல்லப்போனால்’.

    ‘உருது மொழி மாறுபட்ட முறையில், அதாவது, வலமிருந்து இடமாக எழுதப்படுகிறது’
    ‘எங்கள் குடும்பத்தின் மூன்றாவது பையன், அதாவது என் தம்பிக்குத்தான் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது’
    ‘அதாவது, நான் என்ன நினைக்கிறேன் என்றால் இந்த விஷயம் அவருக்கு நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும்’