தமிழ் அதிகபட்சம் யின் அர்த்தம்

அதிகபட்சம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (மிக) உயர்ந்த அளவு.

  ‘அவரால் செய்ய முடிந்த அதிகபட்ச உதவி இதுதான்’
  ‘இந்தச் சிறிய வண்டியில் அதிகபட்சம் ஐந்து பேர் பயணம் செய்யலாம்’
  ‘ஒரு மாதத்தில் அதிகபட்சமாக ஐந்து ஞாயிற்றுக்கிழமைகள் வரலாம்’
  ‘அதிகபட்சமான மாணவர்கள் ஆங்கிலத்தில் தோல்வியுறுகிறார்கள்’
  ‘அந்தக் குற்றத்துக்கு அதிகபட்ச தண்டனையான ஆறு மாதச் சிறை அவனுக்கு வழங்கப்பட்டது’