தமிழ் அதிகம் யின் அர்த்தம்

அதிகம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  குறிப்பிட்ட அளவைவிடக் கூடுதல்; மிகுதி.

  ‘கைகள் இன்னும் அதிகமாக நடுங்கின’
  ‘ஒருவரிடம் அளவுக்கு அதிகமாக அதிகாரம் இருப்பது நல்லதல்ல’
  ‘இந்த வீட்டுக்கு நீங்கள் கேட்கிற வாடகை அதிகம்’
  ‘திருமணமான பின் அதிகம் வெளியே செல்ல முடியவில்லை’
  ‘இந்த நூலகத்திற்கு ஒவ்வொரு நாளும் ஆயிரத்திற்கும் அதிகமான வாசகர்கள் வருகிறார்கள்’
  ‘மலைப் பகுதிகளில் அதிகமான குளிர் காணப்படுவது இயல்பு’