அதிகாரம் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

அதிகாரம்1அதிகாரம்2

அதிகாரம்1

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  வகிக்கும் பதவியாலோ இருக்கும் நிலையாலோ முடிவுகளை எடுப்பதற்கும் செயல்படுத்துவதற்கும் ஆணை பிறப்பிப்பதற்குமான உரிமை அல்லது சக்தி.

  ‘அதிகாரத்தால் எல்லாவற்றையும் சாதித்துவிட முடியாது’
  ‘பழைய உத்தரவைத் திரும்பப் பெறும் அதிகாரம் எங்களுக்கு இல்லை’

 • 2

  ஆட்சிப் பொறுப்பு.

  ‘முடியாட்சியில் தந்தைக்குப் பின் மகன் அதிகாரம் ஏற்பான்’
  ‘அதிகாரத்திற்கு வந்தவுடன் சர்வாதிகாரியின் முதல் வேலை எதிரிகளை ஒழித்துக்கட்டுவதாகத்தான் இருக்கும்’

 • 3

  மரபோ சட்டமோ ஒருவருக்கு வழங்கும் உரிமை.

  ‘சொத்தை விற்க உங்களுக்கு அதிகாரம் இல்லை’
  ‘சொந்த வீடுபோல் அதிகாரமாய் உள்ளே நுழைந்தான்’

 • 4

  சோதிடம்
  ஒருவரின் ஜாதகத்தில் குறிப்பிட்ட கிரகம் குறிப்பிட்ட பலனைத் தரும் ஆற்றல்; ஆட்சி.

  ‘வெளிநாடு செல்லும் யோகத்தைத் தரும் அதிகாரம் சுக்கிரனுக்கு உண்டு’

அதிகாரம் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

அதிகாரம்1அதிகாரம்2

அதிகாரம்2

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (பண்டைய இலக்கிய இலக்கண நூல்களில் காணப்படும்) உட்பிரிவு.

  ‘திருக்குறள் 133 அதிகாரங்கள் கொண்ட நூல்’
  ‘தொல்காப்பியம் மூன்று அதிகாரங்களைக் கொண்டது’