தமிழ் அதிசயம் யின் அர்த்தம்

அதிசயம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (வித்தியாசமான நிகழ்ச்சியோ பொருளோ ஏற்படுத்தும்) வியப்பு; ஆச்சரியம்.

  ‘இந்தப் படத்தின் வெற்றியை நினைத்துப்பார்த்தால் அதிசயமாக இருக்கிறது’
  ‘வேற்று கிரகவாசிகள் போன்று தோன்றிய அவர்களை அதிசயமாகப் பார்த்துக்கொண்டிருந்தான் சிறுவன்’

 • 2

  வழக்கத்துக்கு மாறான (வியப்பை ஏற்படுத்தும் வகையிலான) நிகழ்ச்சி.

  ‘இன்றைக்குச் சீக்கிரமாக வந்துவிட்டாயா? அதிசயம்தான்!’
  ‘அதிசயமாக இன்று அவன் விடுப்பு எடுத்திருக்கிறான்’

 • 3

  வியப்பை ஏற்படுத்தக் கூடியதும் வித்தியாசமானதுமான ஒன்று.

  ‘பழைய உலக அதிசயங்களுள் இப்போது பிரமிடுகள் மட்டுமே மிஞ்சியிருக்கின்றன’
  ‘கணிப்பொறி இருபதாம் நூற்றாண்டின் அதிசயம்’

 • 4

  (நம்ப முடியாத அளவுக்கு) விந்தையானது.

  ‘அந்தக் கோரமான விபத்தில் அவர் தப்பிப்பிழைத்தது அதிசயம்தான்’