தமிழ் அதிபதி யின் அர்த்தம்

அதிபதி

பெயர்ச்சொல்

 • 1

  அருகிவரும் வழக்கு (ஆளவோ அதிகாரம் செலுத்தவோ) உரிமை உடையவர்.

  ‘இந்தச் சொத்துக்கெல்லாம் அதிபதி இவர்தான்’
  ‘அரசன் என்பவன் ஒரு நாட்டின் அதிபதி’

 • 2

  சோதிடம்
  (ஒரு ஜாதகத்தில் குறிப்பிட்ட வீட்டிற்கு) உரியவர்.

  ‘இவரது ஜன்ம லக்கினமாகிய மிதுனத்திற்கு அதிபதி புதன்’