தமிழ் அதிர் யின் அர்த்தம்

அதிர்

வினைச்சொல்அதிர, அதிர்ந்து

 • 1

  விசையின் காரணமாகத் தொடர்ந்து நடுக்கம் ஏற்படுதல்.

  ‘வேகமாகச் சென்ற புகைவண்டியால் பாலம் அதிர்ந்தது’
  ‘பூமி அதிரும்படியாக யானை நடந்து சென்றது’
  ‘குண்டு வீச்சினால் நிலம் அதிர்ந்தது’
  ‘பூகம்பத்தைத் தொடர்ந்து பூமி விட்டு விட்டு அதிர்ந்துகொண்டே இருந்தது’
  ‘அவள் அதிர்ந்து நடந்து நான் பார்த்ததில்லை’

 • 2

  (முரசு போன்றவை) ஒலித்தல்.

  ‘முரசு அதிர்ந்தது’

 • 3

  (நிகழ்ச்சியின் அல்லது சூழ்நிலையின் எதிர்பாராத தாக்கத்தால்) உலுக்கப்படுதல்; நடுங்கிப்போதல்.

  ‘நண்பன் விபத்தில் காலமானான் என்ற செய்தியைக் கேட்டு அதிர்ந்துபோனேன்’
  ‘‘வீட்டுக்குள் நுழையாதே’ என்று அவர் போட்ட கூச்சலைக் கேட்டு அவன் அதிர்ந்து நின்றான்’