தமிழ் அதிர்ச்சி யின் அர்த்தம்

அதிர்ச்சி

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (எதிர்பாராத நிகழ்ச்சியால் நிலைகுலையும்படி) மனத்தில் ஏற்படும் பாதிப்பு.

  ‘மார்பில் வலி ஏற்பட்டவுடன் சிலர் அதிர்ச்சி அடைந்துவிடுகிறார்கள்’
  ‘சாவுச் செய்தியைக் கேட்டதும் ஏற்பட்ட அதிர்ச்சி இன்னும் நீங்கவில்லை’

 • 2

  (திடீரென்று மின்சாரம் பாய்வதால்) உடலில் ஏற்படும் பாதிப்பு.

  ‘மின்சாரம் பாய்ந்ததால் ஏற்பட்ட அதிர்ச்சி காரணமாகத் தூக்கி எறியப்பட்டான்’

 • 3

  நிலநடுக்கம்.

  ‘முதலில் ஏற்பட்ட அதிர்ச்சிக்குப் பிறகு பத்து முறை பூமி அதிர்ந்தது’