தமிழ் அதிரடி யின் அர்த்தம்

அதிரடி

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  எதிர்பாராத நேரத்தில் திடீரென்றும் கடுமையாகவும் செயல்படும் தன்மை.

  ‘கொள்ளையர்கள் மீது காவல்துறையினர் அதிரடித் தாக்குதல் நடத்தினர்’
  ‘அதிரடிச் சோதனை’

 • 2

  அதிர்ச்சி தரும் வகையில் செயல்படும் தன்மை.

  ‘சிலர் வேண்டுமென்றே அதிரடி விமர்சனம் செய்கிறார்கள்’
  ‘‘அதிரடி அரசியலுக்குத்தான் காலம்’ என்றார் தலைவர்’

 • 3

  (விளையாட்டுப் போட்டியில் இயல்புக்கு மாறாக) வேகமாகவும் தீவிரத்துடனும் ஆடும் போக்கு.

  ‘டெண்டுல்கர் அதிரடியாக ஆடிச் சதம் போட்டார்’
  ‘ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே அர்ஜென்டீனா அணி அதிரடி ஆட்டத்தில் இறங்கியது’