தமிழ் அதிர்வு யின் அர்த்தம்

அதிர்வு

பெயர்ச்சொல்

  • 1

    (விசையால் பொருளில் ஏற்படும்) நுண் அசைவு; நடுக்கம்.

    ‘நமது செவிப்பறை வினாடிக்கு 20 முதல் 20,000 முறை ஏற்படும் அதிர்வுகளை உணரும் சக்தி கொண்டது’
    ‘விமானத்தளத்திலிருந்து புறப்படும் விமானங்கள் ஏற்படுத்திய அதிர்வுகளால் அருகிலிருந்த கோவில் சேதமடைந்தது’
    உரு வழக்கு ‘என் இளம் வயதில் அதிர்வுகளை ஏற்படுத்தியவர்கள் ரஷ்ய எழுத்தாளர்கள்’