தமிழ் அதிர்ஷ்டம் யின் அர்த்தம்
அதிர்ஷ்டம்
பெயர்ச்சொல்
- 1
(எப்படி, எதனால் என்று விளக்க முடியாதபடி திடீரென்று ஒருவருக்கு) வாய்க்கும் நன்மை; யோகம்.
‘சாதாரண ஆளாக இருந்தவருக்கு இப்படி ஓர் அதிர்ஷ்டம்; இன்று அவர் கோடீஸ்வரர்’‘அவனுடைய அதிர்ஷ்டம், படித்து முடித்தவுடனேயே வேலை கிடைத்துவிட்டது’‘இந்த இடத்தில் கிணறு தோண்டுகிறோம்; தண்ணீர் வருவதும் வராததும் உங்கள் அதிர்ஷ்டம்’