தமிழ் அது யின் அர்த்தம்

அது

பிரதிப்பெயர்

 • 1

  பேசுபவரிடமிருந்து இடத்தாலோ காலத்தாலோ தள்ளி இருக்கும் ஒன்றைக் குறிப்பிடுவதற்கும் ஒரு வாக்கியத்திலோ பத்தியிலோ ஏற்கனவே குறிப்பிடப்பட்ட பெயரைத் திரும்பக் குறிப்பிடுவதற்கும் பயன்படுத்தும் பிரதிப்பெயர்.

  ‘அது என்ன மரம்?’
  ‘அது நடந்து பத்து வருடங்கள் இருக்கும்’
  ‘எங்கள் திட்டத்தைப் பற்றிப் பிரதமரிடம் எடுத்துக் கூறினோம். அவரும் அது குறித்துத் தீவிரமாக யோசிப்பதாக எங்களிடம் தெரிவித்துள்ளார்’
  ‘‘எனக்குக் குமுதம் பத்திரிகை வாங்கிக்கொண்டு வருகிறாயா?’ ‘அது என் வேலை இல்லை.’’

 • 2

  காலத்தைக் குறிக்கும் ‘நாள்’, ‘சமயம்’ ஆகிய சொற்களுக்குப் பெயரடையாக வரும்போது ‘அந்த’ என்ற பொருளைத் தரும் பிரதிப்பெயர்.

  ‘நாளைக் காலை அன்னாரின் இறுதிச் சடங்கு நடக்கவிருக்கிறது. அதுசமயம் படத்திறப்பு விழாவும் நடக்கவிருக்கிறது’
  ‘அதுநாள் வரை நான் எந்த நடிகரையும் நேரில் பார்த்ததில்லை’